சீன-அமெரிக்க தலைவர்கள் சந்திப்புக்கான ஒளிபரப்புக்கு சீன ஊடகக் குழுமத்தின் தயார் பணி
2023-11-14 15:02:58

அமெரிக்க அரசுத் தலைவர் ஜொன் பைடனின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 14முதல் 17ஆம் நாள் வரை அமெரிக்காவில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் சந்திப்பு நடத்தவும், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் 30ஆவது உச்சி மாநாட்டில் பங்கெடுக்கவும் உள்ளார். இதை ஒளிபரப்ப சீன ஊடகக் குழுமத்தின் செய்தி மையம் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது. இரு நாட்டு அரசுத் தலைவர்கள் சந்திப்பு, ஏபெக் உச்சி மாநாடு ஆகியவற்றை ஒளிபரப்பு செய்ய சீன ஊடகக் குழுமம் நன்கு தயாரான நிலையில் உள்ளது.