2023 ஏபெக் வணிகத் தலைவர்கள் மாநாட்டில் 120 சீனப் பிரதிநிதிகள் பங்கேற்பு
2023-11-15 18:41:42

2023ம் ஆண்டின் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின்  வணிகத் தலைவர்கள் மாநாடு, நவம்பர் 15 மற்றும் 16ம் நாட்களில் அமெரிக்காவில் நடைபெறுகிறது. அதில் பங்கெடுக்க, சீன சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில், 80 சீனத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 120 பிரதிநிதிகள் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுள்ளனர். அவர்கள், எண்ணியல் பொருளாதாரம், இயந்திரத் தயாரிப்பு, மருந்து தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு முதலிய துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சீன சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் ரேன் ஹோங்பின் அண்மையில் அளித்த பேட்டியில், கூட்டு நலன் பெறும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விருப்பம், சீன-அமெரிக்க வணிகத் துறைக்கு அவசரமாக உள்ளது. இரு தரப்பின் ஒத்துழைப்பு அதிகரிப்பு, உலகிற்கு உறுதித் தன்மை, நிதானம் மற்றும் உந்து சக்தியை ஊட்டும் என்று தெரிவித்தார்.