சீன-ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்புடைய ஏற்றுமதி இறக்குமதி பங்கு
2023-11-15 15:51:09

சீன வணிக துறை அமைச்சம் வெளியிட்ட செய்தியின்படி, கடந்த சில ஆண்டுகளில், சீனாவுக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் இதர 20 உறுப்புகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்ந்து ஆழமாகி வருகிறது. ஆசிய-பிசிபிக் பொருளாதாரத்தை கட்டியமைப்பதற்கு சீனா தொடர்ந்து பங்காற்றி வருகிறது.

2022ஆம் ஆண்டில், சீனாவுக்கும் ஏபெக் உறுப்புகளுக்கும் இடையே மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 3 இலட்சத்து 73 ஆயிரத்து 908 கோடி அமெரிக்க டாலராகும். இது, அந்த ஆண்டில் சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகையில் 59.7 விழுக்காட்டை வகிக்கிறது. சீனாவுக்கான 10 முன்னணி வர்த்தக கூட்டாளிகளில் 8 ஏபெக் உறுப்புகள் உள்ளன. இவ்வமைப்பின் 13 பொருளாதார உறுப்புகளுக்கான வர்த்தகக் கூட்டாளிகளில் சீனா முதலிடத்தை வகிக்கிறது.

தவிர, சீனாவின் வெளிநாட்டு முதலீடுத் தொகையில் 73.3 விழுக்காடு ஏபெக் உறுப்புகளில் காணப்பட்டுள்ளது.