ஐ.நா:சூடான் பல பகுதிகளில் காலரா நோய் பாதிப்பு
2023-11-15 15:08:55

உள்ளூர் நேரப்படி 14ஆம் நாள், ஐ.நாவின் மனித நேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சூடானின் மத்திய கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் 2525 பேருக்கு காலரா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இதில் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆகும்.

இவ்வாண்டின் டிசம்பர் திங்கள் வரை, சூடான் முழுவதிலும், 31 இலட்சம் மக்கள் காலரா நோய் பாதிக்கும் அபாயத்தில் உள்ளனர். சூடானுக்கு 29 இலட்சம் காலரா தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார அமைப்பின் நிர்வாகத்தில் தடுப்பூசி வினியோகத்துக்கான சர்வதேச ஒருங்கிணைப்பு குழு அனுமதித்துள்ளது. இத்தடுப்பூசி போடும் நடவடிக்கை நவம்பர் திங்களின் இறுதியில் தொடங்கும்.