காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வதன் ஒத்துழைப்பு பற்றிய சீன-அமெரிக்க அறிக்கை
2023-11-15 16:59:54

காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வது தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த சன்னிலேண்ட்ஸ் அறிக்கையை சீனாவும் அமெரிக்காவும் நவம்பர் 15ஆம் நாள் கூட்டாக வெளியிட்டன.

எரியாற்றல் கொள்கை மற்றும் உத்திநோக்கு ரீதியான இரு தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும், பரிமாற்றங்களை மேற்கொள்ளவும், நடைமுறை ரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு நாடுகள் திட்டமிட்டுள்ளதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.