உலகப் பொருளாதாரத்தின் மையத்தில் ஏபெக் பொருளாதார உறுப்பினர்கள்
2023-11-15 15:50:34

2023ஆம் ஆண்டில் ஏபெக் நிதி அமைச்சர்கள் கூட்டத்துக்கு பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெலன் கூறுகையில், ஏபெக் பொருளாதார உறுப்பினர்கள் உலகப் பொருளாதாரத்தின் மையத்தில் உள்ளன என்றும், ஏபெக் பொருளாதார உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார். 

ஏபெக் உறுப்பினர்கள் உலகின் மிக வேகமாக வளரும் மற்றும் மிகவும் ஆற்றல்மிக்க பொருளாதார உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவை உலக வளர்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவித்து வருகின்றன என்று நிதி அமைச்சர்கள் கூட்டத்தின் தொடக்க உரையில் யெலன் தெரிவித்தார்.