ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ பிரதேசத்தின் 2023ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி முன்னாய்வு குறைவு
2023-11-16 14:53:23

ஐரோப்பிய ஆணையம் உள்ளூர் நேரம் 15ஆம் நாள் அன்று 2023ஆம் ஆண்டின்  இலையுதிர்கால பொருளாதார முன்னாய்வு அறிக்கை வெளியிட்டது. இதில் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான முன் மதிப்பீட்டைக் குறைப்பதாக தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் 0.6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, கோடைகால பொருளாதார முன்னாய்வு அறிக்கையின் கணிப்பை விட 0.2 சதவீத புள்ளிகள் குறைக்கப்படும். 2024ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரம் 1.3 சதவீதம் அதிகரித்து, முந்தைய முன்னாய்வை விட 0.1 புள்ளிகள் குறைவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் பணவீக்கம், இறுக்கமான நாணய கொள்கை, பலவீனமான வெளிப்புற தேவை ஆகியவற்றால், முந்தைய முன்னாய்வை விட பொருளாதாரம் மேலும் அதிகமாக பாதிக்கப்படுகிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது