பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து ஈரான்-ரஷியா பேச்சுவார்த்தை
2023-11-16 15:21:43

உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் நாள் ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மெஹ்தி சஃபாரி, தலைநகர் தெஹ்ரானில் ரஷியாவின் துணை வெளியுறவு அமைச்சரும் பிரிக்ஸ் விவகாரத்துக்கான ரஷிய ஒருங்கிணைப்பாளருமான செர்கை ரியாப்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் ஒத்துழைப்பு இயங்குமுறையில் ஈரான் இணைந்த பிறகு ரஷியாவுடன் நடத்திய முதல் சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை இதுவாகும்.

2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் ரஷியா பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பு வகிக்க தொடங்குவதையும், இக்காலகட்டத்தில் அதன் பணிகளில் முன்னுரிமைகளையும் செர்ஜி ரியாப்கோவ் அறிமுகப்படுத்தினார். பிரிக்ஸ் ஒத்துழைப்புகள் பரந்த மற்றும் பல்வகையான துறைகளில் காணப்படுகின்றன என்றும், இதில் ஈரான் ஆக்கப்பூர்வமாக பங்கேற்று குறிப்பிடத்தக பங்காற்றும் என்றும் சஃபாரி தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், எரியாற்றல், போக்குவரத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பிரிக்ஸ் நாடுகளின் நடவடிக்கைகள் பற்றியும், பிரிக்ஸ் ஒத்துழைப்பு இயங்குமுறையின் வளர்ச்சி குறித்தும், இரு தரப்பினரும் விவாதித்தனர்.