ஐ.சி.ஏ.ஓ.தரநிலையில் இணைந்துள்ள பெய்தோவ் வழிகாட்டி அமைப்பு
2023-11-16 15:39:38

சீனாவினால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட பெய்தோவ் வழிகாட்டி அமைப்பின் தர நிர்ணயங்கள் மற்றும் அறிவுரை ரீதியான நடவடிக்கைகள், அண்மையில் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து குறித்த பொது ஒப்பந்தத்தின் இணைப்பு ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பானது, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தர நிர்ணயங்களில் சேர்க்கப்பட்டுள்ளதையும், உலகளாவிய சிவில் விமானப் போக்குவரத்துக்குப் பொதுவாக பயன்பட்டு வரும் செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பாக அது மாறியுள்ளதையும் இது குறிக்கிறது.

பெய்தோவ் அமைப்புமுறை, ஐ.நா.வின் அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டுள்ள உலகளாவிய 4 பெரிய செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்புமுறைகளில் ஒன்றாகும். உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு இது சேவை அளித்து வருகின்றது.