சீன-அமெரிக்க உறவின் மைல்கல் நிகழ்வு சான் ஃப்ராங்சிஸ்கோ சந்திப்பு
2023-11-16 17:42:28

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அமெரிக்காவின் சான் ஃப்ராங்சிஸ்கோவில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் சந்திப்பு நடத்தினார். சர்வதேச சமூகம் இதில் உயர்வாக கவனம் செலுத்துகின்றது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 16ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

இச்சந்திப்பில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் ஆழமாக கருத்துகளைப் பரிமாற்றி, இரு பெரிய நாடுகள் கூட்டாக வாழும் வழிமுறையை விவாதித்தனர். எதிர்காலத்தில் இரு நாட்டுறவின் வளர்ச்சி இச்சந்திப்பில் திட்டமிடப்பட்டது என்றார்.

அரசியல், தூதாண்மை, மனித பரிமாற்றம், உலக நிர்வாகம், ராணுவ பாதுகாப்பு ஆகிய துறைகளில் 20க்கு மேலான பொது கருத்துகள் எட்டப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.」