தாரிமு வடிநிலத்தில் உயர் உற்பத்தி எண்ணெய் மற்றும் எரிவாயு ஓட்டம் சோதனை வெற்றி
2023-11-16 16:04:02

சிங்சியான் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தாரிமு வடிநிலத்தில் 9,432 மீட்டர் ஆழமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது. இதன் மூலம், தினசரி 200 டன் கச்சா எண்ணெய் மற்றும் 50 ஆயிரம் கன மீட்டர் எரிவாயு கிடைக்கும். இக்கிணற்றின் ஆழம் ஆசியாவில் முன்னணியில் உள்ளது என்று சைனொபேக் நிறுவனம் 15ஆம் நாள் அறிவித்தது.