© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 15ஆம் நாள் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள ஃபிலோலி பண்ணைத் தோட்டத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர் கூறுகையில்,
கடந்த முறை ஓராண்டுக்கு முன் நாங்கள் இருவரும் இந்தோனேசியாவின் பாலி தீவில் சந்தித்தோம். இப்போது வரை நிறைய நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. உலகம் கோவைட் 19 பரவலிலிருந்து மீண்டுள்ளது. ஆனால் இந்நோய் பரவலின் பாதிப்பு இன்னும் உள்ளது. உலக பொருளாதாரம் மீட்சியடைந்த போதிலும் மீட்சியாற்றல் போதாது. தொழில் சங்கிலியும் வினியோக சங்கிலியும் தடை செய்யப்படுகின்றன. பாதுகாப்புவாதம் மோசமாகி வருகின்றது. நூற்றாண்டு காலத்தில் வேகமாக மாறி வரும் பின்னணியில், உலகில் மிக முக்கியமான இருத்தரப்புறவான சீன-அமெரிக்க உறவை யோசித்து, திட்டமிட வேண்டும். இரு நாட்டுறவு மக்களின் இன்பத்திற்கும் உலக வளர்ச்சிக்கும் பங்காற்ற வேண்டும் என்றார்.
கடந்த 50 ஆண்டுகாலத்தில் சீன-அமெரிக்க உறவு நிறைய இன்னல்களைச் சந்தித்து, சிக்கல் போக்கில் வளர்ந்து வருகின்றது. இரு பெரிய நாடுகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொள்ள வேண்டும். ஒன்றை ஒன்று மாற்ற முயற்சிக்க கூடாது. மோதல் ஏற்படும் பாதிப்பு எந்த நாடு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
இக்காலத்துக்குப் பொருத்தமற்ற பெரிய நாடுகளிடையேயான போட்டி, சீன-அமெரிக்கா மற்றும் உலகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. சீனா மற்றும் அமெரிக்காவின் வெற்றிகள் மற்ற தரப்புக்கு வாய்ப்புகளாகும். இரு நாடுகளின் வரலாறு, கலாச்சாரம், சமூக அமைப்பு முறை, வளர்ச்சிப் பாதை முதலியவை வேறுப்பட்டவை. ஆனால், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிப்பது, சமாதான சக வாழ்வு கோட்பாட்டைப் பின்பற்றுவது, ஒத்துழைப்பு மூலம் கூட்டு நலம் பெறுவது ஆகியவற்றில் இரு தரப்பும் ஊன்றி நின்றால், கருத்து வேற்றுமையைத் தாண்டி, சரியான வழிமுறையைக் கண்டறியலாம். சீன-அமெரிக்க உறவின் எதிர்க்காலம் ஒளிமயமானது என்று நம்புவதாக ஷி ச்சின்பிங் கூறினார்.
சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சி திசை குறித்து நாங்கள் இருவரும் முடிவு எடுத்துள்ளோம். மக்களுக்கும், உலகிற்கும், வரலாற்றுக்கும் பொறுப்பேற்றுள்ளோம். இன்று சீன-அமெரிக்க உறவின் நெடுநோக்குத்தன்மை, முழுமை மற்றும் வளர்ச்சி திசைத்தன்மை வாய்ந்த பிரச்சினைகளைப் பற்றியும், உலக அமைதி மற்றும் வளர்ச்சி குறித்த பிரச்சினைகள் பற்றியும், பைடனுடன் கருத்துக்களைப் பரிமாற்றி ஒத்த கருத்தை எட்டுவோம் என எதிர்பார்ப்பதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.