சான் ஃப்ராங்சிஸ்கோ விருப்பத்தை நனவாக்க வேண்டும்
2023-11-17 17:12:21

நவம்பர் 15ஆம் நாள், அமெரிக்காவின் சான் ஃப்ராங்சிஸ்கோ நகரிலுள்ள ஃலோலி பண்ணைத் தோட்டம், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்-அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் இருவரும் அங்கே 4 மணி நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசியல், தூதாண்மை, மனித பரிமாற்றம், உலக நிர்வாகம், ராணுவ பாதுகாப்பு ஆகிய துறைகளில் 20க்கு மேலான பொது கருத்துகள் எட்டப்பட்டதோடு, எதிர்காலத்துக்கு நோக்கிய சான் ஃப்ராங்சிஸ்கோ விருப்பமும் உருவாகியது. இவ்விருப்பம் இரு நாட்டுறவு வளர்ச்சிக்காக திசையை வழிகாட்டி, உலகிற்கு உறுதிதன்மையையும் நிதானத்தன்மையையும் ஊட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளும், சரியான புரிதல்களைக் கூட்டாக உருவாக்கவும், சர்ச்சைகளைக் கூட்டாக கட்டுப்படுத்தவும், ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புகளைக் கூட்டாக முன்னேற்றவும், பெரிய நாடுகளின் பொறுப்புகளைக் கூட்டாக ஏற்றுக்கொள்ளவும், மனித தொடர்புகளைக் கூட்டாக முன்னேற்றவும் வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்தது.

சான் ஃப்ராங்சிஸ்கோ, இரு நாட்டுறவை நிதானப்படுத்தும் புதிய துவக்கமாக மாற வேண்டும். பாலி தீவு ஒற்றுமைக்குப் புறம்பான படிப்பினை அமெரிக்கா பெற்று, சீனாவுடன் இணைந்து கூட்டாக செயல்படுத்தி, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் கருத்து ஒற்றுமையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீனா விரும்புகின்றது.