சான்ஃபிரான்சிஸ்கோவில் சீன-அமெரிக்க பொது மக்களிடையே பரிமாற்றம்
2023-11-17 16:03:43

சீன ஊடகக் குழுமம், அமெரிக்க-சீன இளைஞர் மாணவர்கள் பரிமாற்றச் சங்கம் முதலியவை, உள்ளூர் நேரப்படி நவம்பர் திங்கள் 16ஆம் நாள், அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோவில் சீன-அமெரிக்க மக்கள் தொடர்பு மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்திற்கான நட்பு உரையாடல் எனும் நிகழ்வை கூட்டாக நடத்தின. இரு நாட்டு மக்களுக்கிடையில் தலைமுறை  தலைமுறையாகப் பரவி வரும் நட்புறவை ஒற்றுமையுடன் பரிமாறிக்கொண்டு, பொது மக்களுக்கிடையில் தொடர்பை இந்த நிகழ்வு வலுப்படுத்தும்.

சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநர் சென் ஹைய்ச்சியொங் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார். அமெரிக்காவின் நட்பார்ந்த பிரமுகர்களும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டனர்.  

மேலும், இந்நிகழ்வில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பாங்லீயுவானுக்காகஅமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் டகோமா நகரிலுள்ள லிங்கன் இடைநிலை பள்ளி மாணவர்கள் தாங்கள்  வரைந்த அழகான ஓவியம் ஒன்றைக்  காட்சிக்கு  வைத்தனர். மேலும், மாணவர்கள் பாடல் மூலம், பாங்லீயுவான் அம்மையாருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.