ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில் 21 பாலஸ்தீன மக்கள் கைது
2023-11-17 18:38:16

இஸ்ரேல் ஹா அரேஸ் நாளேட்டின் தகவலின்படி, இஸ்ரேல் தேசியப் பாதுகாப்புப் படை, எல்லை பாதுகாப்புக் காவற்துறை, தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை 17ஆம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில், 21 பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படை கைது செய்துள்ளது. அவர்களில் 6 பேர், ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதத்தாரிகள் என உறுதியாகி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன், இஸ்ரேல் படை, 16ஆம் நாள் காசாவின் தென்பகுதி நகரான யூனிஸ் கிழக்கு பகுதியில், அங்குள்ள மக்கள் வெளியேறுமாறு வற்புறுத்தும் விதம், வான் வழியே துண்டு பிரசுரங்களை வீசியது. அதே நாள், இஸ்ரேல் படையின் நடவடிக்கை, அடுத்த கட்டத்துக்குள் நுழைவதாக அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார்.