ஐஸ்லாந்து: ரெய்கியன்ஸ் தீபகற்பத்தில் எரிமலைக் குழம்பு
2023-11-17 16:16:32

ஐஸ்லாந்து வானிலை நிலையம் உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரெய்கியன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியான நிலநடுக்கம் ஏற்பட்டு, பாறைக் குழம்பு மேற்பரப்பை நோக்கி வெடிக்கும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின்படி, இப்பகுதியில் 15ஆம் நாள் விடியற்காலை முதல் இது வரை, சுமார் 800 முறை நிலநடுக்கம் ஏறபட்டுள்ளது. குறிப்பாக 10 ஆம் நாள் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதிகரித்தது.  அதனையடுத்து மக்களின் அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு, அப்பகுதியில் உள்ள கிரின்டாவிக் மாவட்டம் 10ம் நாள் அவசரநிலை ஒன்றைப் பிறப்பித்து அம்மாவட்டத்தில் வசித்து வந்த 4 ஆயிரம் குடிமக்களை வெளியேற்றியுள்ளது.