2023 சீனச் சர்வதேச சுற்றுலா கண்காட்சி குன்மிங்கில் துவக்கம்
2023-11-18 11:01:48

2023ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சுற்றுலா கண்காட்சி, சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம், சீனப் பயணியர் விமானச் சேவை நிர்வாகம், யுன்னான் மாநில அரசு ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், நவம்பர் 17ஆம் நாள் குன்மிங் நகரில் துவங்கியது.

வணக்கம் சீனா என்ற தலைப்பிலான இக்கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. 90 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 6 சிறப்பு காட்சியிடங்கள் அமைக்கப்பட்ட இக்கண்காட்சி, 70க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய தொழில் நிறுவனங்களும் 800க்கும் அதிகமான சர்வதேச சுற்றுலா வணிகர்களும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.