© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன-அமெரிக்க உறவின் நிலவரம் மற்றும் எதிர்கால அணுகுமுறை பற்றி விளக்கிக் கூறும் விதம், சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் தொலைக்காட்சி வலையமைப்பு சரியான பாதையைக் கண்டறிதல் எனும் சிறப்பு நிகழ்ச்சியை வெளயிட்டது. வரும் காலத்தில் பெரிய நாடுகள் பழகுவதற்கான புதிய மாதிரியை இவ்விரு நாடுகள் எப்படி உருவாக்குவது குறித்து இந்நிகழ்ச்சியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவது என்பது, அரை நூற்றாண்டு காலத்தில் சீன-அமெரிக்க உறவில் காணப்பட்ட உண்மையும், இருதரப்பும் நனவாக்க வேண்டிய பொது இலக்கும் ஆகும். இந்த சிறப்பு நிகழ்ச்சியில், பல பிரமுகர்கள் அளித்த பேட்டிகள், பெருவாரியான தரவுகள் மற்றும் விளக்கப்படங்கள் ஆகியவற்றின் மூலம், சீனாவும் அமெரிக்காவும் ஏன் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சீனா-அமெரிக்கா இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்டு, பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றை மீளாய்வு செய்தால், இருநாட்டுறவின் திறவுக்கோல் பொது மக்கள் தான் என்பதை தெளிவாகக் கண்டறிய முடியும். எதிர்காலத்தில் இருநாடுகள் இருநாட்டு மக்களின் பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஊக்குவித்து, பரஸ்பர புரிந்துணர்வை அதிகரித்தால், இருநாடுகளுக்கிடையே நிகழும் இன்னல்கள் மற்றும் சவால்களுக்குத் தீர்வுமுறை காணப்படும்.
தற்போது சிக்கலாக மாறி வரும் உலகில் சீனாவும் அமெரிக்காவும் பெரிய நாட்டின் பொறுப்புடன், உலகின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காக்கவும் உலகின் கூட்டு வளர்ச்சிக்காகவும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் இந்நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.