© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவின் வரலாறு, கவிதை, இசை ஆகியவை பற்றி தாய்லாந்தின் இளவரசி சிரிண்டோர்ன்(Sirindhorn) சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வருகிறார். 1981ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆண்டுதோறும் அவர் சீனாவுக்கு வருகை தருகிறார். சீனாவின் வளர்ச்சி மற்றும் மாற்றம் பற்றி நேரில் கண்ட அவர், இருநாட்டுறவின் வளர்ச்சிக்கும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
சீனா பற்றி மேலும் அறிந்து கொள்ளும் விதம், கடந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சிரிண்டோர்ன் அடிக்கடி சீனாவில் பயணம் மேற்கொண்டு, கல்விப் பயின்று, சீனா-தாய்லாந்து இடையே நட்பு ஒத்துழைப்புக்கு பாலம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அவரது கருத்தில் இருநாட்டு இளைஞர்களின் கூட்டு கற்றல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. வகுப்புறையில் படிப்பு மற்றும் பரிமாற்றம் மட்டுமல்ல, வகுப்பறைக்கு அப்பால் சுற்றுப்பயணம், விளையாட்டு, பல்வகை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இக்கற்றலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், படிப்பை முடித்துக் கொண்ட பிறகு, அவர்கள் தொடர்புகளை நிலைநிறுத்தி, ஒருவருக்கு ஒருவர் உதவியளிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
சீனா-லவோஸ்-தாய்லாந்து இருப்புப்பாதை பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று சிரிண்டோர்ன் குறிப்பிட்டார். இந்த இருப்புப்பாதை கட்டிமுடிக்கப்பட்ட பிறகு இருதரப்பு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். தாய்லாந்து-சீனா இடையே பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புகள் அதிகரிப்பதோடு, இருநாட்டு மக்கள் ஒத்துழைப்புடன் மேலதிக திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு மூலம், இருநாட்டு மக்கள் மற்றும் உலகின் பல்வேறு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு நனவாக்கப்பட்டுள்ளது. வர்த்தக முதலீட்டைத் தவிர, பொது மக்களின் பயணம், சுற்றுலா ஆகியவற்றுக்கும் இம்முன்மொழிவு துணைபுரிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சீன-தாய்லாந்து பண்பாட்டுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வரும் தாய்லாந்து இளவரசி சிரிண்டோர்னுக்கு, 2019ஆம் ஆண்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நட்பு பதக்கத்தை வழங்கினார். இருநாட்டுறவு மேலும் அருமையான எதிர்காலத்துக்குச் செல்லும் என நம்பப்படுகிறது.