ஏபெக் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் நிறைவு
2023-11-18 15:02:41

30ஆவது ஏபெர் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டம் நவம்பர் 17ஆம் நாள் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் நிறைவுற்றது. ஏபெக் அமைப்பு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார முன்னேற்றங்களைப் பயன்படுத்தி, இப்பிரதேசத்தின் பெரும் சாத்தியம் மற்றும் உயிராற்றலைத் தொடர்ந்து வெளிக்கொணர்ந்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து சுற்றுச்சூழல் சவால்களையும் சமாளிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு, ஏபெக் அமைப்பின் தலைமைப் பதவியில் பெரு நாடு வகிக்க உள்ளது. பெரு நாட்டின் அரசுத் தலைவர் கூறுகையில், 2024ஆம் ஆண்டில் ஆண்-பெண் சமத்துவத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி, அரசியல், சமூகம் மற்றும் வேலைவாய்ப்பு துறையில் பெண்களுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, வளர்ச்சிப் போக்கில் பங்கெடுக்க இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.