ஷி ச்சின்பிங்கின் அமெரிக்கப் பயணம் பற்றி சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ விளக்கம்
2023-11-18 21:58:35

2023ஆம் ஆண்டு நவம்பர் 14 முதல் 17ஆம் நாள் வரை, அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனின் அழைப்பு ஏற்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சான் ஃபிரான்சிஸ்கோவுக்குச் சென்று சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பை நடத்தி, 30வது ஏபெக் தலைவர்கள் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பயணம் நிறைவடைந்த போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இப்பயணத்தின் விபரங்களை பற்றி செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

இந்தப் பயணம் உலகளவின் கவனத்தை ஈர்த்து மாபெரும் சாதனைகளைப் பெற்று ஆழமான முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சீன-அமெரிக்க உறவின் நிதானத்தன்மையை வலுப்படுத்தி, ஆசிய-பசிபிக் ஒத்துழைப்புக்கு புதிய இயக்கு ஆற்றலை ஊட்டி, சர்வதேச மற்றும் பிரதேச நிலைமைக்கு நேர்மறை ஆற்றலைச் சேர்க்க வேண்டுமென்றும்  சர்வதேச ஊடகங்கள் பொதுவாக கருதுகின்றன என்று வாங்யீ கூறினார்.