முதல் 10 திங்கள்காலத்தில் சீனா ஈர்த்துள்ள அந்நிய முதலீடு
2023-11-18 11:24:10

சீன வணிக அமைச்சகம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனாவில் 98 ஆயிரத்து 701 கோடி யுவான் மதிப்புள்ள அந்நிய முதலீடு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 9.4 விழுக்காடு குறைந்துள்ளது. சீனாவில் புதிதாக உருவாக்கப்பட்ட அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 947 ஆகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை காட்டிலும் 32.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள், சீனாவுக்கான முதலீட்டுத் தொகை முறையே 110.3, 94.6, 90.0, 66.1 மற்றும் 33 விழுக்காட்டில் உயர்ந்துள்ளது.