சீனாவில் நேரலை மூலமான சில்லறை விற்பனை அதிகரிப்பு
2023-11-18 13:26:43

இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் சீனாவில் இணைய வழி சில்லறை விற்பனை 12.3 லட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தை விட 11.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் நேரலை மூலமான சில்லறை விற்பனை 2.2 லட்சம் கோடி யுவானைத் தாண்டி, 58.9 விழுக்காடு அதிகரிப்பைக் கண்டுள்ளது என்று சீன வணிக அமைச்சகம் நவம்பர் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

சீன வணிக அமைச்சகத்தின் ஆதரவுடன், தற்போது வரை, 2600க்கும் மேற்பட்ட மாவட்ட நிலை மின்னணு வணிகச் சேவை மையங்கள் மற்றும் பொருள் புழக்க மையங்களும், 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மின்னணு வணிக மற்றும் விரைவு அஞ்சல் சேவை நிலையங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிநாடுகளில் சீனாவின் எல்லை கடந்த மின்னணு வணிக பண்டசாலைகளின் எண்ணிக்கை 1500ஐ தாண்டியுள்ளது. அவற்றின் மொத்த பரப்பளவு 1 கோடி 90 லட்சம் சதுர மீட்டருக்கு அதிகமாகும். மின்னணு வணிகத் துறையின் வளர்ச்சிக்கு அவை ஆதரவளித்துள்ளன என்று வணிக அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.