© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
குளிர்காலம் மற்றும் வசந்தகாலத்தில் நீர்ப்பாசனம் மற்றும் சேமிப்பு, உயர்தர விளைநிலம் கட்டுமானம் ஆகியவை பற்றிய கூட்டத்தை சீன அரசவை நவம்பர் 17ஆம் நாள் நடத்தியது. இது தொடர்பான பணிகளை முன்னேற்றுவதற்கு சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் முக்கிய உத்தரவு பிறப்பிட்டார்.
விளைநிலம் கட்டுமானம் என்பது, உணவுப் பாதுகாப்பின் அடிப்படையைப் பன்முகங்களிலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகும். வேளாண் நிலப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு கட்சி மற்றும் அரசு ஒரேமாதிரியில் முழுமையாகப் பொறுப்பேற்று, நீர்ப்பாசனம் மற்றும் சேமிப்பையும் உயர்தர விளைநிலம் கட்டுமானத்தையும் பெரும் முயற்சியுடன் முன்னேற்ற வேண்டும். வேளாண்துறையின் பேரிடர் தடுப்பு மற்றும் குறைப்புத் திறனை வலுப்படுத்தி, பல்வேறு கட்டுமானப் பணிகளிலும் விவசாயிகள் மற்றும் சமூக ஆற்றல் பங்கெடுக்கும் ஆர்வத்தைத் தூண்டி, இப்பணிகளைச் சீராக நிறைவேற்ற வேண்டும். வேளாண் நிலங்களின் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தி, நாட்டின் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதற்கும் வலுவான வேளாண்துறையின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்கும் உறுதியான அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்று இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.