அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதிநிதி குழு சீனாவுக்கு வருகை
2023-11-20 11:50:18

அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதிநிதி குழு, நவம்பர் 20 மற்றும் 21ஆம் நாட்களில் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்தார். பிரதிநிதி குழு உறுப்பினர்களில் சவுதி அரோபியா வெளியுறவு அமைச்சர் பைசல், ஜோர்டானிய துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சஃபாடி, எகிப்திய வெளியுறவு அமைச்சர் ஷோக்ரி, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ, பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மாலிகி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் தாஹா ஆகியோர் அடங்குவர். இந்தப் பயணத்தின் போது, தற்போதைய பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலைத் தணிப்பது, பொதுமக்களைப் பாதுகாப்பது, பாலஸ்தீனப் பிரச்சினையை நியாயமான முறையில் தீர்ப்பது ஆகியவை குறித்து, பிரதிநிதி குழுவுடன் சீனா ஆழ்ந்த முறையில் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளும்.