2024ஆம் ஆண்டில் சீனாவின் விண்வெளி ஏவுதல் கடமைகள்
2023-11-20 14:37:21

மனிதரை ஏற்றிச்செல்வதற்கான விண்வெளி அலுவலகம் வெளியிட்ட தகவல்களின்படி, 2024ஆம் ஆண்டில், தியன்சோ-7 சரக்கு விண்கலம், ஷென்சோ-18 விண்கலம், தியன்சோ-8 சரக்கு விண்கலம், ஷென்சோ-19 விண்கலம் ஆகியவை 4 முறையே பறத்தல் கடமைகளை செயல்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில், தியன்சோ-7 சரக்கு விண்கலம், சீனாவின் ஹைனான் மாநிலத்தின் வென்சாங் ஏவு தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில், இத்தளத்தில் இவ்விண்கலம் விண்ணில் ஏவப்படும் என திட்டமிட்டப்பட்டுள்ளது. 

தற்போது, சீனாவின் விண்வெளி நிலையம் மற்றும் பல்வேறு சாதனங்கள் சீராகவும் நிதானமாகவும் இயங்கி வருகின்றன.