© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
காசா பகுதியில் பகைமை நடவடிக்கைகள் மற்றும் மனித நேய பேரழிவினை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், மருத்துவமனைகள் மற்றும் பிற முக்கிய அடிப்படை வசதிகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் உலகச் சுகாதார அமைப்பு 19ஆம் நாள், ஜெனீவாவில் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வமைப்பு வெளியிட்ட செய்தியின்படி, இவ்வமைப்பின் தலைமையில், ஐ.நா மனித நேய மதிப்பீட்டு குழு ஒன்று 18ஆம் நாள், வட காசா பகுதியில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு பயணம் மேற்கொண்டது. முன்னதாக, இஸ்ரேலுடன் இணைந்து, பாதுகாப்பு வழியில் தடையின்றி உள்ளதை உறுதி செய்வது இக்குழுவின் கடமை ஆகும்.
இச்செய்தியின்படி, இக்குழு இம்மருத்துவமனைக்குச் சென்றடைந்த போது, அதிக அளவிலான நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் போரிலிருந்து தப்பி அங்கு அடைக்கலம் பெற்றிருந்தவர்கள் ஆகியோர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். தற்போது, 25 மருத்துவ பணியாளர்கள் மற்றும் 291 நோயாளிகள் மட்டுமே இம்மருத்துவமனையில் உள்ளனர்.