புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ஜென்டின அரசுத் தலைவர்
2023-11-20 14:54:52

அர்ஜென்டீனத் தேசிய தேர்தல் ஆணையம் 19ஆம் நாளிரவு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, தீவிர வலதுசாரி தேர்தல் கூட்டணியின் " லா லிபர்டாட் அவன்சா கட்சியின்" வேட்பாளரான ஜேவியர் மில்லாய், அதே நாளில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலின் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று அர்ஜென்டினாவின் அடுத்த அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் டிசம்பர் 10ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார். நான்கு ஆண்டுகள் அவரது பதவிக்காலமாகும்.