சீனாவின் சர்வதேச விண்வெளி ஒத்துழைப்புகள்
2023-11-20 15:35:13

2023 விண்வெளி தொழில் நுட்பத்தின் அமைதி நோக்கப் பயன்பாட்டுக் கருத்தரங்கு வெளியிட்ட தகவல்களின்படி, 50க்கு மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் சீனா விண்வெளி ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

சமீபத்தில், சீனா முன்வைத்த பல நாடுகளுடன் இணைந்து கூட்டாகக் கட்டியமைத்துள்ள சர்வதேச சந்திரன் ஆய்வு நிலையத் திட்டத்தில் பெலாரஸும் பாகிஸ்தானும் புதிதாக கலந்துகொண்டுள்ளன. இந்நிலையத்தின் கட்டுமானம், இயக்க மேலாண்மை போன்ற துறைகளில் தொடர்புடைய தரப்புகள் பரந்த அளவில் ஒத்துழைப்புகள் மேற்கொள்ளும்.