வங்காளத்தேசத்தில் கடுமையான டெங்கு காய்ச்சல்
2023-11-20 14:53:17

வங்காளத்தேசப் பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் 19ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, அதே நாளில், முழு நாட்டிலும் 1291 பேர் டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு முதல் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அவர்களில் 1549 பேர் உயிரிழந்தனர்.

இந்த ஆண்டு வங்காளத்தேசத்தில் மிக மோசமான பாதிப்பை டெங்கு தொற்றுநோய் ஏற்படுத்தியது.

தொற்றுநோயை எதிர்க்கின்ற வங்காளத்தேசத்துக்கு உதவி அளிக்கும் விதம், சீனா தொற்றுநோய் எதிர்ப்பு பொருட்களை வங்காளத்தேசத்துக்கு அளித்துள்ளது. இந்த மாதத்தில் இப்பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.