25ஆவது சீன உயர் தொழில் நுட்ப பொருட்காட்சியில் அதிகரித்த பரிவர்த்தனை
2023-11-20 10:50:52

25ஆவது சீன உயர் தொழில் நுட்பப் பொருட்காட்சி 19ஆம் நாள் நிறைவடைந்தது. இப்பொருட்காட்சியில் மொத்தமாக, 2 இலட்சத்து 48 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர். வர்த்தகத் நோக்கத்துக்கான பேச்சுவார்த்தையின் மூலம் நடைபெற்ற பரிவர்த்தனை தொகை 3727.9 கோடி யுவானாகும். இப்பொருட்காட்சியில் 105 நாடுள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. 132 முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. 681 புதிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் புதிய முடிவுகள் வெளியிடப்பட்டன.

இப்பொருட்காட்சியில், "பரந்த வானம்-குறைந்த வானத்தில் தொழில்நுட்பக் கண்காட்சி" முதல் முறையாக அமைக்கப்பட்டது. இதில், விண்வெளி விமானங்கள், ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் ஆய்வுக் கலங்கள் உள்ளிட்ட பல்வேறு  முன்னேறிய தொழில்நுட்ப உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.