காசாவிலுள்ள இந்தோனேசிய மருத்துவமனை தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்
2023-11-21 15:20:57

காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனை நவம்பர் 20ஆம் நாள் தாக்கப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதே நாள் தெரிவித்துள்ளது. சர்வதேச மனித நேய சட்டத்தின்படி மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளுக்கு மதிப்பு அளித்து அவற்றின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யுமாறு தொடர்புடைய தரப்புகளுக்கு இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அக்டோபர் 7ஆம் நாளிலிருந்து இந்த மருத்துவமனை குறைந்தது 5 முறை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன், எரிபொருள் மற்றும் மின்னாற்றல் பற்றாக்குறை காரணமாக அதன் இயக்கம் நிறுத்தப்பட்டது. தற்போது அடிப்படைச் சேவை மட்டும் அளிக்கப்படுகின்றது.