கூட்டு வளர்ச்சி மற்றும் நிரந்தர அமைதி பற்றிய விவாதக் கூட்டம்
2023-11-21 17:37:51

ஐ.நா. பாதுகாப்பவையின் நடப்பு தலைமைப் பதவியில் இருக்கும் சீனாவின் முன்மொழிவின்படி, நிரந்தர அமைதியை மேம்படுத்தும் கூட்டு வளர்ச்சி என்ற தலைப்பிலான பொது விவாதக் கூட்டம் 20ஆம் நாள் நடைபெற்றது. ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி சாங் ஜுன் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். 70க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

வளர்ச்சியானது அனைத்து பிரச்சினைகளுக்கான பொதுத் தீர்வாகும் என்று சாங் ஜுன் சுட்டிக்காட்டினார். மேலும், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து கூட்டு வளர்ச்சியை நனவாக்குவது என்பது சர்வதேச அமைதியைப் பேணிக்காப்பதற்கான பயனுள்ள வழிமுறையாகும் என்றும், சீனா தனது நவீனமயமாக்கலின் மூலம் புதிய வளர்ச்சியைப் பெறுவதோடு, உலகின் பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உரிய நேரத்தில் சீனா முன்மொழிந்து நடத்திய இக்கூட்டத்தைப் பல்வேறு தரப்பினர்கள் பாராட்டினர்.