சீன மற்றும் பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர்களின் தொடர்பு
2023-11-21 14:52:17

சீனாவுக்கும் பாலஸ்தீனத்துக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 35ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் மாலிஜி ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.

வாங் யீ கூறுகையில், பாலஸ்தீன மக்கள் தங்கள் நியாயமான உரிமைகளை மீட்டெடுப்பதற்கான நீதியான இலட்சியத்தைச் சீனா எப்போதும் உறுதியாக ஆதரித்து வருகிறது. பாலஸ்தீனப் பிரச்சினையைப் பன்மூக, நீதியான மற்றும் தொடர்ச்சியான முறையில் தீர்க்க இடைவிடாத முயற்சி செய்வோம் என்றார்.

சீனாவுடன் இணைந்து பாடுபட்டு, இரு நாடுகளின் நெடுநோக்குக் கூட்டாளி உறவை மேலும் வலுப்படுத்த மாலிஜி விரும்புகின்றார். காசா மோதல் பிரச்சினையில் சீனாவின் நியாயமான நிலைப்பாட்டையும் பாலஸ்தீன மக்களின் நீதியான இலட்சியத்தையும் சீனா எப்போதும் ஆதரிப்பதையும் பாலஸ்தீனம் மிகவும் பாராட்டுகிறது என்று மாலிஜி தெரிவித்தார்.