ஃபுகுஷிமா அணு கழிவு நீரின் 3ஆம் கட்ட வெளியேற்றம் நிறைவு
2023-11-21 14:04:05

ஜப்பானின் டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, ஃபுகுஷிமா அணு உலையில் கதிரியக்க நீரின் 3ஆம் கட்ட வெளியேற்றம் நவம்பர் 20ஆம் நாள் நண்பகல் நிறைவடைந்தது. நவம்பர் 2ஆம் நாள் தொடங்கி, இக்கட்டத்தில் சுமார் 7753டன் கதிரியக்க நீர் கடலில் வெளியேற்றப்பட்டது. 4ஆம் கட்ட வெளியேற்றம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 23 ஆயிரத்து 351டன் கதிரியக்க நீர் கடலில் வெளியேற்றப்பட்டுள்ளது.