சீனா, முதலீடு செய்வதற்கான தலைசிறந்த நாடாகும்: ஷிச்சின்பிங்
2023-11-21 16:25:51

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சான்ஃபிரான்சிஸ்கோவில் ஏபெக் கூட்டத்தின் போது, சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்காலம் பற்றி கூறுகையில்,

தொழில் மற்றும் வணிக துறையினர்கள் கூறியது போல், கருத்துகளுக்கு ஏற்ப, முதலீட்டுக்கு தலைசிறந்த இடம் பற்றி குறிப்பிடவும், சீனா தான் அதிகமானோரின் மனதில் தோன்றும். அடுத்த தேர்வாக சீனாவாகவே இருக்கும் என்றார் அவர்.

உலகம் முன்னேறி செல்வதுடன், சூழ்நிலையும் மாறி வருகிறது. எதிர்காலத்தில், சீனா இன்னும் தொழில் மற்றும் வணிக துறையினர்களின் கவனத்தை ஈர்ப்பதன் காராணம் என்ன?சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏபெக் கூட்டத்தின் போது வழங்கிய கருத்துக்கள், இதற்கான விளக்கமளித்தன.

இவ்வாண்டு, உலகப் பொருளாதாரத்திற்கு பங்கு விகிதத்தில் சீனா மூன்றில் ஒரு பகுதியை வகிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில், 2023ஆம் ஆண்டில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி முன்மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் 5.4 விழுக்காடு உயர்த்தியுள்ளது. 2024ஆம் ஆண்டில், சீனப் பொருளாதார கண்ணோட்டம் குறித்த அறிக்கைகளை கோல்ட்மேன் சாக்ஸ், யூபிஎஸ் முதலிய அந்நிய நாணய நிறுவனங்களும் முறையே வெளியிட்டுள்ளன. சீனப் பொருளாதாரம் தொடர்ந்து மீட்சியடைந்து சீராக வளர்ந்து வரும் என்பது இவ்வறிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது. சீனப் பொருளாதாரம் வலிமையாக உள்ளது. இதற்கு உள்ளார்ந்த ஆற்றல் அதிகரித்து, சீனப் பொருளாதாரம் நீண்டகாலமாக சீரான வளர்ச்சியின் முன்னேற்றப் போக்கு மாறாது என இந்த அறிக்கைகள் வெளியிட்டன.

மேலும், சீனச் சந்தை ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மேம்பாடு கொண்டுள்ளது. தொடர்புடைய முன்மதிப்பீடுகளின்படி, அடுத்த 15 ஆண்டுகாலத்தில், சீனாவில் நடுத்தர வருமானம் பெறுவோர் எண்ணிக்கை 40 கோடியிலிருந்து 80 கோடி வரை உயரும்.

சந்தைமயமாக்கம், சட்ட ஒழுங்கு மயமாக்கம் மற்றும் சர்வதேச மயமாக்கம் ரீதியில் தொழில் நுடத்துதல் என சூழலை உருவாக்க சீனா ஊன்றி நிற்கிறது. அந்நிய நிறுவனங்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் கொள்கைகள் மாறப்போவதில்லை.

தொழில் முனைவோர் சந்தைக்கு மிகவும் உணர்திறன் உடையவர்கள். சீன-அமெரிக்க வணிகச் சங்கம் வெளியிட்ட இவ்வாண்டின் கள ஆய்வு தரவுகளின்படி, சீனாவிலுள்ள 66 விழுக்காடு அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள், அடுத்த 2 ஆண்டுகளில், சீனாவுக்கான முதலீடுகளை நிலைநிறுத்தி அல்லது அதிகரிக்கும். இவ்வாண்டின் முதல் 10 திங்களில், சீனாவில் புதிதாக உருவாக்கப்பட்ட அந்நிய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 947 ஆகும். இது, கடந்த ஆண்டின் அதே காலத்தைக் காட்டிலும் 32.1 விழுக்காடு அதிகரித்து, சீனா மீதான நம்பிக்கைகளை அந்நிய முதலீடுகள் வெளிப்படுத்தியுள்ளன எனத் தெரிவித்தார்.