பரஸ்பர நாணயத்தில் சீன-சவுதி அரேபியா ஒப்பந்தம்
2023-11-21 11:55:15

சீனாவின் மக்கள் வங்கியும் செளதி அரேபியா மத்திய வங்கியும் இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சீன மத்திய வங்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு, 5ஆயிரம் கோடி யுவான் ஆக, (சுமார் 6.98 பில்லியன் அமெரிக்க டாலர்கள்), அதாவது 2600கோடி சவுதி ரியால்கள் ஆக மதிப்பிடப்பட்டுள்ளாது.

இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

சீனாவுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான நிதி ஒத்துழைப்பை பலப்படுத்தவும், இரு நாடுகளுக்கிடையே சொந்த பணங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்தவும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வசதிகளை மேம்படுத்தவும் இது உதவும்.