காசாவில் உணவு வினியோக முறைமை சிதைவு
2023-11-21 19:15:34

உலக உணவுத் திட்ட அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் நவம்பர் 21ஆம் நாள் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், உணவு உற்பத்தியின் தேக்க நிலை, எல்லை நுழைவாயிலை மூடுதல் ஆகிய காரணங்களால், தற்போது காசா பகுதியில் உணவு வினியோக முறைமை சிதைவடையத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார். மேலும், முன்னதாக காசாவிற்குள் அனுமதிக்கப்பட்ட லாரிகளில் பாதிக்குக் குறைவானவை உணவுப் பொருட்களைக் கொண்டுள்ளதாகவும், கடந்த 45 நாட்களில் காசாவிற்குள் சென்ற உணவுப் பொருட்கள் உள்ளூர் மக்களின் 3 நாட்களின் தேவைக்குக் கூட போதுமானது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.