முதலாவது சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சி நவம்பர் 28 துவக்கம்
2023-11-21 15:37:26

முதலாவது சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சி நவம்பர் 28 முதல் டிசம்பர் 2ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சிலின் பொறுப்பாளர் ஒருவர் 21ஆம் நாள் கூறுகையில், நுண்ணறிவு வாகனங்கள், பசுவை வேளாண்மை, தூய்மையான எரியாற்றல், எண்ணியல் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், ஆரோக்கியமான வாழ்க்கை ஆகிய 5 வினியோக சங்கிலிகளுக்கான காட்சி அரங்குகள் இப்பொருட்காட்சியில் அமைக்கப்படும். சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 515 தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் பங்கெடுக்கவுள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.