இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை
2023-11-22 11:48:10

இஸ்ரேலுடனான போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டது என்று ஹமாஸ் அறிவித்தது.

கத்தார் மற்றும் எகிப்தின் இணக்க முயற்சியில் இஸ்ரேலுடன் 4 நாட்கள் நீடிக்கும் போர் நிறுத்தத்தை ஹமாஸ் அறிவித்துள்ளது. இப்போர் நிறுத்த காலத்தில், 50 இஸ்ரேல் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஹமாஸ் விடுவிக்கும். 150 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். அவற்றைத் தவிர்த்து இக்காலத்தில் மனித நேய உதவிப் பொருட்களை ஏற்றிச்செல்லும் நூற்றுகணக்கான சரக்குந்துகள் காசா பிரதேசத்தில் நுழையும் என்று ஹமாஸ் 22ஆம் நாள் அறிவித்தது.