சீனாவில் 5ஜி அடிப்படை நிலையங்கள் அதிகரிப்பு
2023-11-22 17:15:20

சீனாவின் 5ஜி இணையக் கட்டுமானம் சீராக வளர்ந்து வருகிறது. அக்டோபர் இறுதி வரை, 5ஜி அடிப்படை நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 32.15 லட்சத்தை எட்டி, செல்லிட தொடர்புக்கான அடிப்படை நிலையங்களின் மொத்த எண்ணிக்கையில் 28.1 விழுக்காடு வகித்துள்ளது. 3 அடிப்படை தகவல் தொடர்பு நிறுவனங்களின் செல்லிடப் பேசி பயனர்களின் எண்ணிக்கை 75.4 கோடியை எட்டியுள்ளது என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் 22ஆம் நாள் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

ஜனவரி முதல் அக்டோபர் வரை சீனாவின் தகவல் தொடர்பு துறை சீரான இயக்கத்துடன் வளர்ச்சி அடைந்துள்ளது. இக்காலத்தில், தொலைத்தொடர்பு தொழிலின் வருமானம்  1 லட்சத்து 41 ஆயிரத்து 680 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 6.9 விழுக்காடு அதிகரித்தது. இணையத் தொலைக்காட்சி, இணைய தரவு மையம், பெருந்தரவு, மேக கணிமை உள்ளிட்ட புதிய அலுவல்களை வளர்ப்பதன் மூலம் கிடைத்த வருமானம் 30 ஆயிரத்து 120 கோடி யுவானை எட்டி, 20.5 விழுக்காடு அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.