சீனாவின் 5 ஜி + தொழில்துறை இணையத்தின் பெரிய அளவிலான வளர்ச்சி
2023-11-22 14:52:04

"2023ஆம் ஆண்டு சீனாவின் 5 ஜி + தொழில்துறை இணைய மாநாடு" 21ஆம் நாள் ஹூபே மாநிலத்தின் வுஹான் நகரில் நிறைவடைந்தது. இம்மாநாட்டில் 2023ஆம் ஆண்டு சீனாவின் "5 ஜி + தொழில்துறை இணையத்தின் வளர்ச்சி" பற்றிய அறிக்கையைச் சீனாவின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில் நுட்பக் கழகம் வெளியிட்டது. சீனாவின் "5 ஜி + தொழில்துறை இணையம்" என்ற திட்டத்தின் நடைமுறை, பெரிய அளவிலான வளர்ச்சியின் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சீனாவின் 5 ஜி + தொழில்துறை இணையம் சம்பந்தப்பட்ட திட்டப்பணிகள், தொழிற்துறைக்குச் சொந்தமான அனைத்து 41 முக்கிய வகைகளிலும் நடைமுரைக்கு வந்துள்ளன. மேலும் தொழில்துறையில் 5 ஜியின் பயன்பாட்டு விகிதம், 60% க்கும் அதிகமாக உள்ளது. 5 ஜி இணையக் கட்டுமானத்தின் மேம்பாட்டுடன், 5 ஜி வணிகப் பயன்பாடும் நாளுக்கு நாள் வேகமாக முன்னேறி வருகிறது. 5 ஜி தொழில் நுட்பத்தின் பயன்பாட்டுச் செலவும் குறைந்து வருகிறது.