உக்ரேனுக்கு புதிய சுற்று இராணுவ ஆதரவு:அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர்
2023-11-22 09:58:22

அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் 20ஆம்  நாள், உக்ரேன் தலைநகர் கீவ் திடீர் பயணம் மேற்கொண்டு, உக்ரேனுக்கு அமெரிக்கா இராணுவ ஆதரவு தொடர்ந்து அளித்துள்ளதாக தெரிவித்தார்.

உக்ரேன் அரசுத் தலைவர் ஜெலென்ஸ்கி, தேசிய பாதுகாப்பு அமைச்சர் முதலியோர் ஆஸ்டினுடன் சந்திப்பு நடத்தினார். 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுத சாதனங்களை உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கும் என்று ஆஸ்டின் அறிவித்தார்.

உக்ரேனுக்கு அமெரிக்கா உறுதியாக ஆதரவளிப்பதை ஆஸ்டின் பயணம் வெளிப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.