பாலஸ்தீனம்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு சீனா வரவேற்பு
2023-11-22 16:48:04

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு சீனா வரவேற்பு தெரிவிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மெளநீங் நவம்பர் 22ஆம் நாள் கூறினார்.

அவர் கூறுகையில், பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே புதிய மோதல் நிகழ்ந்த பின், போர் நிறுத்துமாறு சீனா வேண்டுகோள் விடுத்ததோடு, பதற்ற நிலைமையைத் தணிவு செய்தல், பொது மக்களைப் பாதுகாத்தல், மனித நேய உதவி மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் விடா முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார். மேலும், தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை, மனித நேய நெருக்கடி மற்றும் பதற்ற நிலைமையைத் தணிவு செய்யத் துணைபுரியும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.