விண்வெளி நெடுநோக்கு நிதியம் ஜப்பான் உருவாக்குதல்
2023-11-22 14:55:11

ஜப்பானின் விண்வெளி ஆய்வு வளர்ச்சி நிறுவனம் குறித்த சட்ட திருத்தம் ஒன்றுக்கு ஜப்பானிய அமைச்சரவைக் கூட்டத்தில் 20ஆம் நாள் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் விண்வெளி தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில், விண்வெளி நெடுநோக்கு நிதியம் இந்நிறுவனத்தில் கட்டியமைக்கப்படும் என்று திட்டமிட்டுள்ளது.

அரசு சாரா ஆற்றல் விண்வெளி வளர்ச்சிப் பணியில் கலந்துகொள்ள ஊக்குவிப்பது இந்நிதியத்தின் நோக்கமாகும். வெளிப்படையான தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்படும் தொழில் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் முதலியவற்றுக்கு நிதியுதவியை இந்நிதியம் வினியோகிக்கும்.

அடுத்த 10 ஆண்டுகாலத்திற்குள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 670 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதித் தொகையை இந்நிதியம் வழங்கத் திட்டமிட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.