2ஆவது எண்ணியல் வர்த்தகப் பொருட்காட்சி தொடங்கவுள்ளது
2023-11-22 15:12:06

உலக எண்ணியல் வர்த்தகப் பொருட்காட்சி, சீனாவில் எண்ணியல் வர்த்தகம் என்பதை கருப்பொருளாக கொண்டு பன்னாட்டுக்கு திறக்கப்படும் ஒரேயொரு தேசிய நிலையிலான பொருட்காட்சியாகும்.

2ஆவது உலக எண்ணியல் வர்த்தகப் பொருட்காட்சி நவம்பர் திங்கள் 23ஆம் முதல் 27ஆம் நாள், சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சௌ நகரில் நடைபெறவுள்ளது. அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட தகவல்களின்படி, இப்பொருட்காட்சியின் ஏற்பாட்டு பணி ஏற்கனவே தயாராக இருக்கிறது.

தற்போது, உலக முன்னணியில் 50 பெரிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் இதில் காட்சிக்கு வைக்கப்படும். எண்ணியல் தொழில் நுட்பத் தொழில் துறையின் முன்னணி முன்னேற்றப் போக்கு இதன் மூலம் வெளிப்படுத்தப்படும்.