சீனாவின் அதிகவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு 20ஆயிரம் மின்னூட்டு சாதனங்கள்
2023-11-23 15:28:02

இவ்வாண்டின் அக்டோபர் திங்கள் வரை, சீனாவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு சேவை வழங்க மொத்தமாக 20ஆயிரம் அதிவேக மின்னூட்டு சாதனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. செல்லிடப்பேசி செயலி மூலம், நாடு முழுவதிலும் உள்ள அதிவேக மின்னூட்டு சாதனங்களின் இருப்பிடம், பயன்பாடு போன்ற விவரங்கள் பற்றி அறியலாம் என்றும், சீனப் போக்குவரத்து துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

மேலும், பெய்ஜிங், ஷாங்காய் உட்பட்ட 11 மாநிலங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள அனைத்து அதிகவேக நெடுஞ்சாலைகளிலும் இந்தச் சாதனங்கள் செயல்பாட்டு வந்துள்ளன என்று தெரிய வந்துள்ளது.