வட கொரியாவுடனான இராணுவ ஒப்பந்தத்தின் சில அம்சங்களிலிருந்து தென் கொரியா விலகல்
2023-11-23 14:51:27

தென் கொரியத் தலைமையமைச்சர் ஹான் டக்-சூ 22ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் சியோலில் தற்காலிக அரசவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

வட கொரியாவுடன் மேற்கொண்டுள்ள இராணுவத் துறை ஒப்பந்தத்தின் சில அம்சங்களிலிருந்து தென் கொரியா விலகும் என்று இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

ஹான் டக்-சூ மேலும் கூறுகையில்,

வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கை மீட்சியடைவதற்கு முன்பு, தென் கொரியா இந்த முடிவுக்கு இணங்க செயல்படும். இரு நாட்டு எல்லை கோட்டில் வட கொரியா மீதான உளவு நடவடிக்கைகளை தென் கொரியா உடனடியாக மீட்கும் என்றார்