நிதானமான உற்பத்தி-வினியோக சங்கிலி உருவாக்கத்தில் சீனாவின் முயற்சி
2023-11-23 19:07:29

சீனா, உலக வினியோக சங்கிலி ஒன்றிணைப்பு வளர்ச்சிக்காக பயனடைந்தவரும் பேணிக்காப்பாளரும் ஆகும். உயர்நிலை வெளிநாட்டு திறப்பில் சீனா ஊன்றிநிற்கும். பல்வேறு நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் நிதானமான தடையின்றி உயர்பயன்னான பரஸ்பர நலன் தரும் கூட்டு நலன்பெறுமான உலக உற்பத்தி-வினியோக சங்கிலி அமைப்புமுறையை கூட்டாக உருவாக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 23ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முதலாவது சீனச் சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி அடுத்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இப்பொருட்காட்சி, உலகளவில் உற்பத்தி மற்றும் வினியோக சங்கிலியின் நிதானமான தடையற்றநிலைமையை பேணிக்காக்கும் வகையில் சீனா அமைத்த மேடையாகும். ஸ்மார்ட் வானூர்தி, பசுமை வேளாண்மை, தூய்மை எரியாற்றல், டிஜிட்டல் அறிவியல் தொழில் நுட்பம், உடல்நல வாழ்வு ஆகிய துறைகள் பற்றிய சிறந்த காட்சி இடங்கள் இதில்உள்ளன என்றும் மாவ்நிங் குறிப்பிட்டார்.