வட கொரியாவின் உளவு செயற்கைக்கோள் டிசம்பரில் இயங்கும்
2023-11-23 12:02:48

கொரிய மத்திய செய்தி நிறுவனம் 22ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, நவம்பர் 21ஆம் நாளில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ள மலிங்யாங்-1 என்கிற உளவு செயற்கைக் கோள், திட்டமிட்டபடி சுற்று வட்டப் பாதையில் தடையின்றி நுழைந்துள்ளது. டிசம்பர் முதல் நாள் தொங்கி, இது அதிகாரப்பூர்வமாக உளவு கடமையை நிறைவேற்றவுள்ளது.

அந்நாட்டின் ஆயுத ஆற்றலுக்கு போதுமான மற்றும் மதிப்புள்ள உளவு தகவல்கள் வினியோகிக்கும் வகையில், பலவித உளவு செயற்கைக்கோள்களை புவிவட்ட பாதைக்கு வட கொரியா அதிகமாக ஏவ வேண்டும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதே நாள் தெரிவித்தார்.